தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.700 முதல் 13,160 ரூபாய் வரை மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக் குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன். அதன்படி ஊதிய மாற்றக் குழு ஒன்று 16.12.2011 அன்று அமைக்கப்பட்டது.