மாசு கட்டுப்பாட்டு சட்டத்தில் மின் இணைப்பை துண்டிக்க முடியாது - மின்வாரியம் மனு

நீர், காற்று மற்றும் சுற்றுச் சூழலில் மாசு ஏற்படுத்தினால், மின் இணைப்பை துண்டிக்கலாம் என்ற அம்சத்தை, மின் விநியோக முறைப்படுத்தும் விதிகளிலிருந்து நீக்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மின் வாரியம் தாக்கல் செய்த மனுவின் மீது, பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த திருத்தம் அமலுக்கு வந்தால், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தைக் காரணம் காட்டி எந்தவொரு தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மின் இணைப்பையும் துண்டிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில், ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், அணு மின்சக்தி சட்டம் மற்றும் ரயில்வே சட்டம் ஆகியவை மட்டுமே, மத்திய அரசின் மின்சார சட்டத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி, மின் இணைப்பைத் துண்டிக்க வழிவகைகள் செய்யும்.
அதேநேரம், தற்போதைய தமிழ்நாடு மின் விநியோக விதிகளின்படி, நீர், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படியும், மின் இணைப்பை துண்டிக்க முடியும். மின்சாரம் என்பது ஒரு இன்றியமையாத தேவை என்கிற பட்டியலில் உள்ளது. எனவே, மாசு கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் மின் இணைப் பைத் துண்டிக்கும் பிரிவுகளை நீக்குவதற்கு தமிழக மின்வாரி யம் முடிவு செய்துள்ளது.
இதற்கு சட்ட ரீதியான உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறி ஒழுங்குமுறை ஆணையத்தில் மின்வாரியம் மனு செய்துள்ளது. புதிய திருத்தத்தின்படி, நுகர்வோர் மின் பயனீட்டுக் கட்டணம், வைப்புத் தொகை, அபராதம், மின் விநியோக கட்டமைப்புக்கான சேவைக் கட்டணம் மற்றும் மின் உற்பத்தி யாளர்களாக இருந்தால் மின்சார சுழற்சிக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தா விட்டால் மட்டுமே மின் இணைப்பு அல்லது சேவை களை துண்டிக்க முடியும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளை மீறி தொழிற்சாலை கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்கினால், அவை மின் வாரியத்திற்குரிய அனைத்து முறையான கட் டணங்களையும் செலுத்தி யிருந்தால், புதிய திருத்தத்தின்படி அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க முடியாது.
திருத்தம் குறித்து பொது மக்கள், நுகர்வோர் அமைப்பு கள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தியாளர்கள் உள் ளிட்டோர் தங்கள் கருத்துகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் டிசம்பர் 13-க்குள் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம் என ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click