மாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்வோருக்கு மொபைலில் அனுப்ப முடிவு


மாதம் தோறும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்த தகவலை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலில், குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்ப மின் கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், தென்சென்னை, வடசென்னை, ஈரோடு, திருச்சி, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஒன்பது மின் வினியோக மண்டலங்களில், 36 மின் வினியோக வட்டங்கள் உள்ளன. மொத்தம், 2.40 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மின் சட்டம், 2003ன்படி, தமிழக மின் வாரியம், தமிழ்நாடு மின் கழகம், உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் மின் வினியோக பிரிவு உள்ளது. நான்கு மாதத்துக்கு முன், மாநிலம் முழுவதும், ஒவ்வொரு மின் வினியோக மண்டலம், வட்டம், பிரிவு அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள, டிரான்ஸ்பார்மர் எண்ணிக்கை, மின்கம்பம், அதில் இருந்து வழங்கியுள்ள மின் இணைப்பு, மின்நுகர்வோர் பெயர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, தகவல்கள் மின்கழக கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, மாநிலம் முழுவதும், மின்நுகர்வோரின் மாதந்திர மின் கட்டணம் மற்றும் அதைச் செலுத்துவதற்கான கடைசி நாள் குறித்த தகவல்களை, சம்பந்தபட்ட நுகர்வோரின் மொபைலுக்கு குறுந்தகவலாக அனுப்ப மின்கழகம் முடிவு செய்துள்ளது. 
இதற்கு ஒவ்வொரு மின் நுகர்வோரும், தங்கள் மொபைல்போன் எண்ணை அருகிலுள்ள உதவி பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மின்சாரம் உபயோகித்தற்காக மாதகட்டணம் குறித்த தகவல் சம்பந்தபட்ட நுகர்வோர் மொபைலுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். 

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click