ஓய்வு பெறும் நிலையில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மின் வாரிய பொறியாளர்கள் ( தினமலர் )

மின்சார வாரியத்தில், 33 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றி, ஓய்வு பெறும் நிலையில் உள்ள, 600க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், சலுகைகள் இல்லாமல், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்தில், 7,000க்கும் மேற்பட்ட, பொறியாளர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மின் வினியோகம்,
துணை மின் நிலையங்களை இயக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார வாரியத்தில், நேரடியாக உதவி பொறியாளர் பணியில் சேர்ந்தவர்கள், 14 ஆண்டு பதவி உயர்வு இல்லாமல் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை ஊக்குவிக்க, வாரியம், 2010ல், உதவி செயற்பொறியாளர் சார்பு என்ற பதவியை வழங்கியது.

இந்த பதவி வழங்கப்பட்டாலும், அவர்கள், உதவி பொறியாளர் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும். பதவி முன்னுரிமையில், எந்த மாற்றமும் இல்லை. ஆண்டுக்கு, 3 சதவீதம் சம்பள உயர்வு மட்டும் வழங்கப்பட்டது. இதேபோன்று, மின்சார வாரிய பணியில் சேர்ந்து, 33 ஆண்டுகள் கடந்து, இளநிலை பொறியாளர் முதல் நிலையில், 14 ஆண்டுகளுக்கும் மேலாக, பதவி உயர்வு இல்லாமல், ஓரிரு ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ள, 600க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு, உதவி செயற்பொறியாளர் சார்பு என்ற பதவியை வழங்க வாரியம் தாமதம் செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: கடந்த, 10.2.2012 மற்றும், 13.2.2012 ஆகிய தேதிகளில், அப்போதைய வாரிய தலைவர் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று மாதங்களுக்குள், பதவி உயர்வை அமல்படுத்த ஒப்பு கொண்டும், ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை, அமல்படுத்தவில்லை. இதனால், வாரியத்தில், 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, ஓய்வு பெறும் நிலையிலும் கூட, பதவி உயர்வு இல்லாமல், சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதால், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் பிரிவில் உள்ள, 600க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=833187

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click