தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

திருச்சி,
தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை சரிபார்த்து கொள்ள இன்று கடைசி நாளாகும்.
மின் கணக்கீட்டாளர் பணி
இது குறித்து வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் கணக்கீட்டாளர் பணி காலி இடங்களுக்கு 10–ம் வகுப்பு முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்கள் பரிந்துரை செய்ய தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயது வரம்பு 1.1.2013–ந் தேதியில் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்குள்ளும், எம்.பி.சி, பி.சி. பிரிவினர் 32 வயதுக்குள்ளும், ஓ.சி. பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
பதிவு மூப்பு பட்டியல்
எஸ்.சி.ஏ பிரிவில் 5.7.1993 வரையும், எஸ்.சி பிரிவில் 25.6.1993 வரையும், எஸ்.டி. பிரிவில் 23.6.1993 வரையும், எம்.பி.சி பிரிவில் 21.6.1996 வரையும், ஓ.சி. பிரிவினர் 29.6.1993 வரையும், பி.சி. முஸ்லிம் பிரிவில் 24.6.1996 வரையும், மாற்றுத்திறனாளிகளில் உறுப்பு நலன் குறைந்தோருக்கு 23.7.1986 வரையும், விழிப்புலன் இழந்தவர்களுக்கு 20.6.1989 வரையும், காதுகேளாதவர்களுக்கு 19.5.1989 வரையும் பதிவு மூப்பு பட்டியல் மாநில அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவு மூப்புக்கு உட்பட்ட தகுதிவாய்ந்த திருச்சி மாவட்ட பதிவு தாரர்களது விவரங்கள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் உள்ளது. பதிவு மூப்புக்கு உட்பட்ட பதிவாளர்கள் இன்று(வியாழக்கிழமை)அனைத்து கல்வி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து பெயர் பட்டியலில் பெயரை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click