சூரிய மின்சக்தி: ரூ.10 கோடி ஒதுக்கீடு ( dinamani. )

வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவ தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் மானியம் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல் ஆண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவ மத்திய அரசு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்குகிறது. அதோடு, தமிழக அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் விவரம்:


வீட்டின் மேற்கூரையில் 1 கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவ ரூ. 1 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் மானியமாகவே ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதையடுத்து, மின் நுகர்வோர் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தாலே தங்களது வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவலாம். ஒரு கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் ஆண்டுக்கு 1,600 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

எனவே, சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவினால் ஆண்டுக்கு ரூ.9,200-ஐ சேமிக்க முடியும். மொத்தம் 10 ஆயிரம் வீடுகளில் இந்த மின் அமைப்பை நிறுவுவதற்கு மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான தமிழக அரசின் மானியம் மொத்தம் ரூ.20 கோடி ஆகும். முதலாண்டில் ரூ.10 கோடியை இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மின் நுகர்வோருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் பயன் கிடைக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://dinamani.com/edition_chennai/chennai/2013/10/25/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82.10-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81/article1854435.ece

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click