விவாதம்” புதிய ஓய்வூதியத் திட்டம் – எதிர்காலத்தின் மீதான சூதாட்டமா? ( மாற்றுவின் கட்டுரை )

(புதிய பென்சன் மசோதா, பாராளுமன்றத்தில் சட்டமாகியிருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை காங்கிரசும் – பாஜகவும்கொண்டுவந்துநிறைவேற்றியுள்ளன. தங்கள் சொந்த தொழிற்சங்கங்களே ஏற்காத இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால், நம் ஓவூதியர்களின் நிதி, பங்குச் சந்தைகளுக்குள் திருப்பிவிடப்படுவது ஒரு அபாயம். இரண்டாவது, இத்தனை ஆண்டுகள் பெற்று வந்த சிறிய அளவிலான சமூகப் பாதுகாப்பும் – இனி இல்லாமல் ஆகப்போகிறது. இளம் தலைமுறையினரை, நிச்சயமற்ற எதிர்காலத்தில் தவிக்கவிடப் போகும் இந்த சட்ட மசோதா தொடர்பாக விவாதிப்போம்)

விவாத நேரம்: இன்று (செப்டம்பர் 09, 2013) மாலை 7 மணி – 9 மணி

விவாதிப்போர்

1. ஆர்.மனோகரன், முன்னாள் பொதுச்செயலாளர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம்.
2. க.சுவாமிநாதன், பொதுச் செயலாளர், தென்மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கம்.
3. இரா. தமிழ்செல்வி, மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
4. ஆர்.இளங்கோவன், செயல் தலைவர், தட்சிண் ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்.

நீங்களும் பங்கெடுக்கலாம் … விவாதம்

ஒரு கோடிப் பேருக்கான ஓய்வூதியம்:
இந்தியாவில் 49 கோடி உழைப்பாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 2 கோடி பேர் திரண்டமைந்த தொழில்களில் உள்ளவர்கள். 25 கோடி பேர் விவசாய தொழிலாளர்கள். இவர்களில் 12 முதல் 13 சதம் பேர்தான் ஏதாவது ஒரு சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உள்ளனர். 87 சதம் பேருக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.
இந்தியாவின் அனைத்து வயதானவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் என்பது சர்வ மக்கள் ஓய்வூதியத் திட்டம் அல்லது சர்வ மக்கள் சமூக பாதுகாப்புத் திட்டம் எனலாம்.
இந்தியா இளமையான நாடு என்கிறார்கள். அதன் சராசரி வயது 26. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 8 கோடி பேர்தான். இது 20 ஆண்டுகளில் ரெட்டிப்பாகலாம்.
இப்போதைக்கு அனைவருக்குமான ஓய்வூதிய பலன் என்பது 8 கோடி பேருக்கான திட்டம்தான். இதில் 1 கோடி பேருக்குதான் ஓய்வூதிய திட்டம் உள்ளது.
ஓய்வூதியம் என்பது உரிமை
மனித சமுதாயம் இரண்டு அடிப்படையான செயல்களைக் கொண்டுள்ளது.ஒன்று, வாழ்வதற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வது.இரண்டு, மனிதனையே உற்பத்தி செய்வது.
இரண்டில் ஒன்று நின்று போனாலும் சமுதாயம் அழிந்துவிடும்.
எனவே, இந்த இரு செயல்களில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் சமூகம் உற்பத்தி செய்த செல்வம் சக்தி உள்ள காலத்திலும் சக்தி இழந்த காலத்திலும் உயிர்வாழும் காலம் வரை பங்கீடும் மறுபங்கீடும் அவசியமாகிறது.
உழைக்கும் மனிதர்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமல்ல உபரியையும் உற்பத்தி செய்கிறார்கள். இந்த உபரி உற்பத்தியை பயன்படுத்தி, உழைக்கும் காலத்திற்கான தேவைகளையும், ஓய்வுகாலத்திற்கான தேவைகளையும் மறு பங்கீடு செய்ய வேண்டும். இதைத்தான் சமூக பாதுகாப்பு என்கிறோம். ஒருவருடைய ஓய்வூதியத்தை அவரே உழைக்கும் போதே உற்பத்தி செய்கிறார். சமூகம் நிலைக்க அவர் ஈடுபட்டது எந்த வேலையாக  வேண்டுமானாலும் இருக்கலாம்.
3 வகையான ஓய்வூதியங்கள்:
          இந்தியாவில் உள்ள ஓய்வூதிய திட்டங்கள் மூன்று விதமாக உள்ளன.
          1. மத்திய மாநில அரசில் 1.1.2004க்கு முன்புவரை இருந்த ஓய்வூதிய திட்டம்.
          2. 1.1.2004 க்கு முதல் உள்ள புதிய பென்சன் திட்டம்.
          3. ஊழியர் பென்சன் 1995.
ஊழியர் பென்சன் திட்டம் 1995
இந்த திட்டத்தின்படி ஓய்வு பெறும் போது எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் 6500 தான் சம்பளம் என்று வைத்துக்கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் மாத ஓய்வூதியம் உயர்ந்தபட்சம் ரூ.1200 தான் கிடைக்கும். எனவே, இவர்களுக்கு போதிய ஓய்வூதியம் என்பது கோரிக்கையாக உள்ளது. பல தனியார் கம்பெனி ஊழியர்களும் சில பொதுத்துறை ஊழியர்களும் இதில் வருகின்றனர்.
மத்திய மாநில அரசு ஊழியர்கள் 1.1.2004க்கு முன்
இவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 1.1.2006ல் 3500ம் அதன்பின் விலைவாசிப் புள்ளியுடன் இணைக்கப்பட்டு பஞ்சப்படியும் வழங்கப்படுகிறது. 1.1.2013ல் அது ரூ.6300/- ஆகும்.
இவர்களது கடைசி மாத சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக தரப்படுகிறது. அதற்குப் பஞ்சப்படி உண்டு. ஒவ்வொரு சம்பளக் கமிசனிலும் பென்சன் உயரும். குடும்ப பென்சன் உண்டு. மணமாகாத மகள், விதவை மகள், விவாகரத்து பெற்ற மகள், உடல் ஒடுங்கிய மகன் யாருக்காவது குடும்ப ஓய்வூதியம் உண்டு. கிராஜுவிட்டி உண்டு. ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்னமே பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஓய்வூதியத் திட்டம் 1957 முதல் அமலில் உள்ளது. அதற்கு முன் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியும் அதற்கு அரசின் பங்கும் இருந்தது. ஓய்வு பெறும்போது இரண்டுக்கும் வட்டியுடன் மொத்த தொகை தரப்பட்டது. அரசின் பங்கை நிறுத்தி அதற்குப் பதிலாக ஓய்வூதியமும் கிராஜுவிட்டியும் வந்தது. அரசு ஊழியர்கள் எதுவும் ஓய்வூதியத்திற்காக பங்களிக்கவில்லை. உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் இது.
இங்கே ஓய்வூதியம் என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது
1.1.2004 முதல் 1.1.2004 முதல் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கு பங்களிப்பு வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்று பெயர். இது, 1.5.2009 முதல் அனைவருக்கும் விருப்பத்தின் அடிப்படையில் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பங்களிக்கப்பு 10 சதம் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால், பலன் என்ன என்று தெரியாத திட்டம். சம அளவு அரசு தன் பங்கைத் தருகிறது. இரு தொகையும் சேர்த்து பங்குச் சந்தையிலும் (இப்போது 15 சதம், சட்டம் நிறைவேறியவுடன் 50 சதம்)
அரசு, தனியார் கார்ப்பரேட் பாண்டுகளில் மூலதன்மிடப்படும் அதைச் செய்பவர்கள் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (PFMs).  இந்த நிறுவனங்களின் பங்குகள்தான் 26 சதம் அந்நியர் வரலாம் என்றும் இன்சூரன் பிரிவில் அது 49, 74, 100 என்று மாறும் போது இதுவும் அவ்வாறே உயரும் என்று சட்டம் நிறைவேறியுள்ளது.
ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையம் தனது இணையதளத்தில் இந்த நிதிக்கு என்னென்ன ஆபத்து நிகழும் என்று பட்டியலிட்டுள்ளது. அதில் ஒன்று, அசலே பறிபோகலாம். பரமபத விளையாட்டுதான். 60 வயதில் ஓய்வுபெறும்போது 60 சதத்தை எடுத்துக் கொள்ளலாம். 40 சதத்தை ஓய்வூதிய கம்பெனியில் ஒரு ஆனுவிட்டி வாங்கலா. அந்த கம்பெனியிலும் 26 சதம் முதல் 100 சதம் வரை அந்நிய முதலீடு வரலாம். அந்த கம்பெனியில் 5 லட்சம் முதலீடு செய்தால்  5000 ஓய்வூதியம் கிடைக்கலாம். அதற்கு பஞ்சப்படி கிடையாது. இறந்துவிட்டால் 5 ஆயிரமும் போச்சு. 5 லட்சமும் பறிமுதல். குடும்ப ஓய்வூதியம் கிடையாது. நீங்கள் கொடுக்கும் 5 லட்சத்தை அந்த கம்பெனி பங்கு சந்தையில் முதலீடு செய்யும் லாபம் வந்தால் பென்சன், நட்டம் வந்தால்  கின்சன் தான். கம்பெனியே சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டாலும் கதை முடிந்தது.
இந்த திட்டத்தையும் இதை நிர்வகிக்கும் ஆணையத்தையும் சட்டப்பூர்வமாக்கவே PFRDA மசோதா 2011. அது இப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமூல் கட்சியும் மட்டும்தான் எதிர்த்து வாக்களித்தன. பாஜகவும் காங்கிரசும் ஒன்னு அதிமுகவும் திமுகவும் ஒன்னு, தொழிலாளி வாயில மண்ணு.
இதன் மூலம் மத்திய மாநில அரசு ஊழியர்களின் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் உறுதியற்றதாக மாற்றப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு இதில் இருந்தும் ஓய்வூதியத்திற்கு என்று நிதி ஒதுக்கியும் ஓய்வூதியம் என்பது உறுதியற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
29 லட்சம் பேர் மத்திய மாநில அரசு ஊழியர்களும் 20 லட்சம் வலம்பன் திட்டத்திலும் 2 லட்சம் தனியார் கார்ப்பரேட் ஊழியர்களும் இதில் உள்ளனர்.
ரூ.35,000 கோடி பணம் சேர்ந்துள்ளது. இந்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து பங்குச் சந்தையைத் தூக்கிப்பிடிக்கும் தாராளமயம், தனியார்மயம், உலகமயமே இதன் நோக்கம். உலக நிதி மூலதனத்தை திருப்திபடுத்துவதே நோக்கம். எனவே, சர்வ மக்களுக்குமான போதிய உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என்பது கோரிக்கையாகிறது. சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி தொழிற்சங்கங்கள், ஐ.என்.டி.யு.சி, பி.எம்.எஸ், எச்.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கங்கள், அனைத்து அரசு ஊழியர் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய 10 கோடி பேர் இதே கோரிக்கையை முன்வைத்து 2012 பிப்ரவரி 28 மற்றும் 2013 பிப்ரவரி 20-21 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்தனர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click