கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட அனைவருக்கும் அனுமதி: நிலைய இயக்குநர் ஆர்எஸ் சுந்தர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 20 நாள்களில் 500 மெகாவாட் மின்உற்பத்தி துவங்கப்படும் என்றும், நிலையத்தை பார்வையிட அடையாள அட்டையுடன் வரும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 20 நாள்களில் 500 மெகாவாட் மின்உற்பத்தி துவங்கப்படும் என்றும், நிலையத்தை பார்வையிட அடையாள அட்டையுடன் வரும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும், நிலைய இயக்குநர் ஆர்எஸ்.சுந்தர் தெரிவித்தார்.இது தொடர்பாக மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலை ஜூலை முதல் இயங்குகிறது. அணுஉலையிலிருந்து வெளியேறும் நீராவியை குளிர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து மின்சார உற்பத்தி துவங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 3,000 ஆர்பிஎம் மிஷினில் மின்உற்பத்திக்கான பரிசோதனை நடத்தியுள்ளோம். இதற்கான பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை குறித்தும் துள்ளியமாக சோதனை செய்துள்ளோம். இதில், மிக நேர்த்தியாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளில் வெற்றிகண்டுள்ளோம்.இது தொடர்பான ஆய்வு அறிக்கையை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு சமர்ப்பித்தோம். வாரியத்தினர் நுணுக்கமாக ஆய்வு செய்து முதல்கட்டமாக, 50 சதவீதம் மின்சார உற்பத்திக்கு, அதாவது முதல்அணுஉலையில் திட்டமிட்டுள்ள 1,000-ம் மெகாவாட் மின்சாரத்தில் 500 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இந்த மின்உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 15 முதல் 20 நாள்களில் இந்த அணுஉலையில் மின்சார உற்பத்தி துவங்கப்படும்.
முதல் அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 462.5 மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. பின்னர் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்யவும் அந்த அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு செய்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சக்தி அமைச்சகத்திடம் ஒப்படைத்துவிடுவோம். பங்கீடு மற்றும் விநியோகத்துக்கான நடவடிக்கைகளை அந்த அமைச்சகத்தினர் மேற்கொள்வர்.இந்த அணுஉலையில் முதல்கட்டமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி துவங்கிய ஓருமாதத்திற்குள், மின் உற்பத்தி 750 மெகாவாட்டாக அதிகரிக்கப்படும். படிப்படியாக டிசம்பர் இறுதிக்குள் 1,000-ம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.
உலகிலேயே கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முனைவர் காளிராஜன் தலைமையிலான விழிப்புணர்வுக்குழு கூடங்குளம் மற்றும் சுற்றுப்புறக்கிராமங்கள், மீனவ கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, குற்றாலச் சாரல் விழாவின் போது, 50 ஆயிரம் பொதுமக்களுக்கும், திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக்ககண்காட்சியில் பல ஆயிரம் மக்களுக்கும் விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் கூறிய விளக்கங்களால் பொதுமக்கள் திருப்தியடைந்தனர். முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறிச்சென்றனர்.அணுமின் நிலையத்தை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் திரளாக வந்து அனுமதி பெற்று அணுமின்நிலையத்தை பார்வையிட்டு திருப்தியுடன் திரும்பிச் செல்கின்றனர். தினமும் 150 முதல் 200 பேர் வரை பொதுமக்கள் அணுமின்நிலையத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர். அடையாள அட்டையுடன் யார் வந்தாலும் பார்வையிட அனுமதி வழங்கப்படும், என்றார்.

http://dinamani.com/latest_news/2013/09/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/article1785847.ece?service=print

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click