Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்
நேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.
TNEB Recruitment 2015-16 https://www.facebook.com/groups/1662721517343327/

Aug 5, 2013

அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி


அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படிமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10 முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.

எத்தனை சதவீதம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய தொழிற்சாலை பணியாளருக்கான ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலைக்குறியீடு ஆகஸ்ட் 30ம் தேதிதான் வெளியாகும். அதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும். இப்போது அகவிலைப்படி 80 சதவீதமாக உள்ளது. 10 சதவீதம் உயர்த்தப்பட்டால் இது 90 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
Post a Comment