விதிப்படி வேலை போராட்டம் என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி:என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பனர், மேற்கொண்டுள்ள, “விதிப்படி வேலை’ போராட்டத்தால், மின் உற்பத்தி குறையத் துவங்கியுள்ளது.

என்.எல்.சி., பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்ற என்.எல்.சி.,யின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பனரின் @காரிக்கையை ஏற்று, என்.எல்.சி., பங்குகளை, தமிழக அர”க்கு விற்க, மத்திய அர” ஒப்புதல் அளித்தது.இதனால், தொழிலாளர்களின் @பாராட்டம் முடிவுக்கு வந்தது. இது முதல்வர் ஜெ.,வின் முயற்சியால் கிடைத்த வெற்றியாக தொழிலாளர்கள் கருதினர். இது, @பாராட்டத்தை முன்னின்று நடத்திய, தொ.மு.ச.,விற்கு பன்னடைவாக கருதப்பட்டது.

இந்த விவகாரத்தில், தி.மு.க., மேலிடம், தொ.மு.ச., நிர்வாகிகளை கடிந்து கொண்டது.இதன் எதிரொலியாக, வே‌லை நிறுத்தப் போராட்ட நாட்களில் பணிக்குச் சென்ற என்.எல்.சி., இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதிலடி தருவோம் என்ற பெயரில், தொ.மு.ச.,வின் முயற்சியால் உருவெடுத்துள்ள விதிப்படி வேலை போராட்டம், தற்போது, என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி குறையும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம், நிர்வாகத்தினர், தொ.மு.ச., மற்றும் அ.தி.மு.க., தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற இருதரப்பு பேச்சில், சுமூக முடிவு எட்டாததால், விதிப்படி வேலை போராட்டம் தொடர்கிறது.தொழிலாளர்களுக்கு, புதிய போனஸ் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி, சி.ஆப்., எனப்படும் விடுப்பு தொடர்பான பரச்னைகளை சரி செய்தால், போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என, தொழிற்சங்க தரப்பல் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்புடையதல்ல; இதுகுறித்து, அவர்களுக்கு, ஏற்கெனவே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் தேவையற்ற போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என, சேர்மன் சுரேந்தர்மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click