மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் 
ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
விலக்கு

ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத சம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.


மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011–2012 மற்றும் 2012–2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.

தாக்கல் செய்ய வேண்டும்

இந்நிலையில், அவர்களும் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011–2012 மற்றும் 2012–2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

எளிமையான ஆன்லைன்

ஆனால், தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்கு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013–2014–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் முறை, எளிதானது, பாதுகாப்பானது. அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும். இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

கட்டாயம்

5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வதை வருமான வரித்துறை கடந்த மே மாதம் கட்டாயம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click