காலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதில் மின்வாரியம் அலட்சியம் தினமலர் யாகு


சென்னை: தமிழக மின் வாரியத்தில், 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறையால், அன்றாட பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு, வாரியத்திற்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மின் வாரியத்தில், களப்பிரிவு, கணக்கீட்டு பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என, மொத்த பிரிவுகளிலும் சேர்த்து, அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 1.45 லட்சம். தற்போது, இப்பிரிவுகளில், 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அன்றாட பணிகள் முடக்கம்: மின் ஊழியர்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால், அன்றாட மின் பராமரிப்பு பணிகள் முடங்கி உள்ளன. மாநிலத்தில், தற்போது, மொத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை, 2.10 கோடி. 15 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களும், 12 ஆயிரம்,ஒயர் மேன் பணியிடங்களும் காலியாக உள்ளன. பல ஆண்டுகளாக,ஒயர் மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மின் நுகர்வோர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்வாரியத்தில், மற்ற பிரிவு பணியாளர்களை விட,ஒயர் மேன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகள் முடங்கி உள்ளன. மேலும், நடமாடும் மின் பழுது நீக்கும் மைய பணிகள் காலதாமதம் ஏற்படுவதோடு, முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.
வருவாய் இழப்பு: களப்பணியாளர் பற்றாக்குறையால், மின் நுகர்வோர் மட்டுமின்றி, மின் வாரியமும் பாதிக்கப்பட்டு உள்ளது. களப் பணியாளர்கள், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு, இணைப்பு வழங்குவது தொடர்பான பணிகளை மேற்கொள்வர். குறைந்தப்பட்சம், 10 அல்லது அதிகப்பட்சம், 60 நாட்களுக்குள் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால், களப்பணியாளர்கள் பற்றாக்குறையால், புதிய மின் இணைப்பு மற்றும் மும்முனை இணைப்பு ஆகியவை பெற, இரு மாதங்கள் வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், வாரியத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
நியமன கொள்கை அவசியம்: இதுகுறித்து, மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின் வாரியத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது. நிதி நெருக்கடியால், பல ஆண்டுகளாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. களப்பணியாளர், உதவியாளர் போன்ற கடை நிலை ஊழியர்கள் நியமனத்தில், வாரியத்திற்கு ஒரு தெளிவான கொள்கை கிடையாது. மற்ற பிரிவு பணியாளர்களை விட, களப் பணியாளர்கள் தேவை அதிகரித்து உள்ளது. மற்ற மாநில மின் வாரியங்களோடு ஒப்பிடும் போது, தமிழக மின் வாரியத்திற்கு,கமர்ஷியல் லாஸ் குறைவு. விற்கப்படும் மின்சாரத்தில், 98 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. மற்ற மின் வாரியங்கள், விற்கும் மின்சாரத்திற்கான கட்டணத்தை வசூலிப்பதில், பெரும் பிரச்னையை சந்திக்கின்றன. தமிழக மின் வாரியம், பணியாளர்கள் நியமனத்திற்கான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தம் 1,500 இணைப்புக்கு, ஒரு ஒயர்மேன் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருந்தால், பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட பணிகளும், முடங்கும். தொடரும் பற்றாக்குறை: மின் வாரியத்தில், உபகரணங்கள் பற்றாக்குறை தொடர்கிறது. மின் பழுது நீக்குவதற்கு, தனியாக,கிட் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கொடுக்கப்படுவதில்லை. மின் உபகரணங்கள் பற்றாக்குறையால், சிறிய பழுதுகளை சரிசெய்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மற்ற மாநில மின் வாரியங்கள், மின்மாற்றி பழுது தொடர்பான கணக்கை சரிவர சமர்ப்பிக்கின்றன. ஆனால், தமிழக மின்வாரியம், சரியான கணக்கை காட்டுவதில்லை. 

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click