என்எல்சியின் பங்குகளை தனியாருக்கு விற்றால் மின்சாரத்தின் விலை உயரும் பிஎம்எஸ் தொழிற்சங்கம் கருத்து தெரிவித்துள்ளது

வடலூர் : என்எல்சியின் பங்குகளை தனியாருக்கு விற்றால் மின்சாரத்தின் விலை உயரும். நாட்டில் மின்பற்றாக்குறை நிலவும் என்று பிஎம்எஸ் தொழிற்சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. நெய்வேலியில் பிஎம்எஸ் நிர்வாக குழு கூட்டம்  நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.இதில் பேசிய மாநில பொதுச்செயலாளர் பழனிச்சாமி, என்எல்சி பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். 5 சதவீத பங்கு விற்பனையால் சீ466 கோடி மட்டுமே கிடைக்கும். லாபத்தின் பங்கு எந்தவித உழைப்பும் இல்லாத தனியாருக்கு சென்றுவிடும்.



என்எல்சியின் லாபம் இந்த ஆண்டு சீ1,459.75 கோடி. இது கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்துள்ளது. இது என்எல்சி தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உழைப்பால் வந்தது. இந்த நிறுவனம் தன்னுடைய திறமையால் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விரிவாக்கம் செய்யும் வகை யில் பணிகளை துவங்கியுள்ளது.



பணிகள் நிறைவடையும்போது இது பல ஆயிரம் கோடி லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.விலைவாசி உயர்ந் துள் ளது. நாட்டின் மின்சார உற்பத்தி செய்து வரும் என்எல்சி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்றால் மின்சாரம் விலையேறும். மின்பற்றாக்குறை உருவாகும். பல்வேறு போராட்ட சூழ்நிலையை உருவாக்கும். இன்றைய அரசு போகிற போக்கில் பங்குவிற்பனை செய்ய நினைத்தால் என்எல்சியில் அனைத்து தொழிற்சங்கங்களோடு இணைந்து பிஎம்எஸ் பல்வேறு போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click