Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

May 14, 2013

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன் -------------------  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி சிஐடியு சங்கத்தின் அன்றையபொதுச்செயலாளராக இருந்த தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தலை மையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் இவ்விரு சங்கங்களையும் பேச்சுவார்த் தைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப் பினர் தோழர் சி. கோவிந்தராஜனிடம் உறுதி அளித்ததன் பெயரில் உண்ணாவிரதம் முடிக் கப்பட்டது. ஆனால் முதல்வர் சொன்ன வாக் குறுதி வழக்கம்போல் காற்றில் பறக்க விடப் பட்டது. முதல்வரும் ஏமாற்றிவிட்டார். எனவே போராட்டத்தை தவிர வேறு வழி யில்லை என காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை இவ்விரண்டு சங்கங் களும் அறிவித்தன. போராட்டம் நூறு சதமானம் வெற்றி பெற்றது. மின் உற்பத்தி மடமட வென சரிந் தது. நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடி ஏற் பட்டது. வேறு வழியில்லாமல் நெய்வேலி நிறுவன அதிபர் கையொப்பமிட்ட கடிதத்தை இரண்டு சங்கங்களுக்கும் அனுப்பி பேச்சு வார்த்தைக்கு வர கேட்டுக்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு சென்றதும், ஏற் கனவே ஐந்து சங்கங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் நீங்களும் கையெழுத்துபோடுங்கள், வேறு எதுவும் பேச முடியாது என நிர்வாகம் நிலை எடுத்தது. எந்த மாற்றமும் இல்லாமல் கையெழுத்துப் போடமுடியாது. குறைந்த பட்சம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந் தரமாக்கவேண்டும். வாரிசுக்கு வேலை கிடைக்க ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் இவ்விரண்டையும் ஏற்றுக்கொண்டால் ஒப் பந்தம் இல்லையேல் நாங்கள் செல்கிறோம் என சிஐடியு, எச்எம்எஸ் சங்கங்கள் உறுதியாக இருந்தனர். வேறு வழியில்லாமல் நிர்வாகம் இவ்விரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தை உருவாக்கினர். பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொசைட்டி உருவாக்குவது, அதில் ஒப்பந் தத் தொழிலாளர்களை இணைப்பது, நிலம் கொடுத்தவர்களையும், நிரந்தர தொழிலாளர் களின் வாரிசுகளையும் இணைப்பது என முடிவானது. ஆனால் நடைமுறையில் இது அமலாகவில்லை. இருப்பினும் ஒப்பந்தத் தொழிலாளர் 5000 பேரை சொசைட்டியில் இணைத்தது. பின் 1995ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொசைட்டி தொழிலாளர் களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரந் தரப்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் உரு வாக்கப்பட்டது. இவ்வொப்பந்தத்தை அம லாக்க சிஐடியு தனியாகவும் இதர சங்கங் களுடன் இணைந்தும் தொடர்ச்சியான போராட்டம் - வேலை நிறுத்தம் வரை சென் றனர். பின் படிப்படியாக 4600 தொழிலாளர் களை நிரந்தரப்படுத்தினர்.இந்நிலையில் 160 தொழிலாளர்கள் ஒன் றிணைந்து இன்டஸ்டிரியல் தொழிலாளர் சங்கம் என ஒரு அமைப்பை உருவாக்கி அதன்மூலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் ஒப் பந்த தொழிலாளியாக சேர்ந்த காலம் தான் சீனியாரிட்டியாக எடுக்கவேண்டுமே தவிர சொசைட்டியில் சேர்ந்த தேதியை சீனி யாரிட்டியாக எடுக்கக் கூடாது என வாதா டினர். தொழிலாளர் நீதிமன்றத்தில் அவர் களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. பின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்றது. அதிலும் தொழிலாளர் நீதிமன்ற தீர் ப்பையே இறுதிப்படுத்தியது. இந்நிலையில் நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றத்திலிருந்து 1995-ல் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் இன்றைய நிலை தெரிய வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்துக்கு சிஐடியு சங்கம் கீழ்க்கண்ட பதிலை உச்ச நீதிமன்றத்திற்குய அனுப்பியது. சொசைட்டி உருவாக்கவும், சொசைட்டி சீனி யாரிட்டி அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், அப்படி நிரந்தரமாகும் போது சொசைட்டியில் ஏற்படுகின்ற காலி இடங்களை இதர ஒப்பந்தத் தொழிலாளர் களை வைத்து நிரப்ப வேண்டும் எனவும் எங் களது சங்கம் கையொப்பமிட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிர்வாகம் அமுலாக்கவில்லை. சொசைட்டியில் ஏற்படும் காலி இடங்களை ஒப்பந்த தொழி லாளர்களை வைத்து நிரப்பவில்லை. நிரந் தரமும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கவில்லை. எனவே அந்த ஒப்பந்தத் தில் கையெழுத்துப் போட்டிருந்தாலும் வழக் கில் கோரியிருக்கின்ற ஒப்பந்த தொழிலாளி யாக சேர்ந்த தேதியை சீனியாரிட்டிக்கு எடுப்பது சரியானது என நாங்கள் கருது கிறோம் என பதிலளித்தது. வழக்கு நடந்துகொண்டிருக்கின்ற கால கட்டத்தில்தான் அனைத்து சங்கங்களும் சேர்ந்து 16-6-2008ல் ஒப்பந்தத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தம் நடை பெற்றது. இவ்வேலை நிறுத்தத்தை முடி வுக்கு கொண்டுவர தில்லியில் முதன்மை தொழிலாளர் நல அதிகாரி (சிஎல்சி) முன் னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய உதவி தலைவர் தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்கள் இப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். இப்பேச்சுவார்த்தையில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைப்பது எனவும் பின் படிப்படியாக நிரந்தரம் எனவும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சிஐடியு ஏற்றுக் கொள்ளவில்லை. சிஎல்சி அவர்களுக்கு ஏன் சிஐடியு கை யொப்பம் இடவில்லை என்கிற காரணத்தை விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டது. இக்கடி தத்தில் இனிமேல் சொசைட்டி என்பது தேவையற்றது. காலம் கடத்த முயற்சிக்கும் ஒரு கருவியாகவே சொசைட்டியை நிர் வாகம் பயன்படுத்துகிறது. மாறாக அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டும். சீனியாரிட்டி பட்டியலை உடன் வெளியிட நடவடிக்கை தேவை போன்ற கோரிக்கை களை கடிதமாக கொடுத்தோம். ஆனால் ஏஐ டியுசி, எல்பிஎப், ஏடிபி போன்ற சங்கங்கள் 5000 பேரை சொசைட்டியில் இணைப்பது என்பதை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட் டனர். நிர்வாக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்தபிறகுதான் இவ் ஒப்பந் தத்தை அமலாக்குவோம் என குறிப்பிட்டது.நிர்வாகத்தின் ஆலோசனைப்படி தொ முசவும் ஏஐடியுசியும் தன்னை இவ்வழக் கில் இணைத்துக்கொண்டது. இவர்கள் இருவரும் இவ்வழக்கு வரும் நேரங்களில் சொசைட்டிதான் தேவை, நேரடி நிரந்தரம் தேவையில்லை என வாதாடினார்கள் என்று வழக்கை நடத்திய வழக்குரைஞரே நேரடி யாக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.தில்லி ஒப்பந்தம் அமலாகாதபோது தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப் தியை சரிகட்ட மீண்டும் 35 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத் தத்தின் முடிவில் 30-10-2012-ல் ரூ.60 ஒரு நாளைக்கு உயர்வு என ஒப்பந்தம் உருவாக் கப்பட்டது. இதை சிஐடியு ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டது. மீண்டும் 21-4-2012-ல் 44 நாட்கள் வேலை நிறுத்தம். மீண்டும் இடைக்கால ஒப்பந்தம் . ‘அதிலும் சொசைட்டி உருவாக்கு வது, அதன் மூலம் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது, நிரந்தரம் என்பது யேவரசயட றயளவயபந அடிப்படையில் உருவாகக்கூடிய காலி இடங்கள் ஏற்படும் போது’ என குறிப்பிட்டிருந்தது. அப்படியானால் யாராவது இறந்துபோனால், அல்லது விபத்து ஏற்பட் டால், அல்லது ஓய்வு பெற்றால் ஏற்படும் காலி இடங்கள், இது 5000 பேரை நிரந்தர மாக்க சாத்தியமா? என்றால் இல்லை. எனவே, போகாத ஊருக்கு வழிகாட்டியாக இவ்வொப்பந்தம் அமைந்துவிட்டது. எனவே சிஐடியு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. ஒப்பந்தம் தொழிலாளர்கள் மத்தி யில் கசப்பான உணர்வை ஏற்படுத்தியது.இக்காலகட்டத்தில் உச்சநீதிமன்றத் திலும் வழக்கு நடைபெறுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிடவேண்டும் என உத்தரவு பிறப்பித் தார். இதன்படி 10632 தொழிலாளர்களின் சீனியாரிட்டி பட்டியலை நிர்வாகம் வெளி யிட்டது மட்டுமல்ல, அதன் நகலையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை விசா ரித்தது. நீதிபதிகள் விசாரணையின் போது நடந்தவைகளை தொழிலாளர்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் சிங்காரவேலர் 21-3-2013 அன்று நடைபெற்ற தொழிலாளர் களின் பாராட்டுக் கூட்டத்தில் கீழ்கண்ட வாறு விளக்கினார்.விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தொமுச சார்பில் வாதாடிய வழக்குi ரஞர் நேரடியாக தொழிலாளியை நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. நெய்வேலியில் தொழி லாளியை சொசைட்டியில் இணைத்து அதன்மூலம் தான் நிரந்தரம் என்கிற நடை முறை இருக்கிறது. எனவே சொசைட்டியில் இணைக்க உத்தரவிடவேண்டும் என கேட் டுக்கொண்டார். இன்னொரு வழக்குரைஞர் ஏஐடியுசி சார்பில் வாதாடும்போது, எங்கள் சங்கம் ஏற்கனவே சொசைட்டி உருவாக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே சொசைட்டியில் 5000 பேரை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என வாதாடினார். தொழிலாளிகளுக்காக வாதாடுகிற சிங்காரவேலர் அவர்களோ, சொசைட்டியும் ஒரு ஒப்பந்தக்காரர்தான், எனவே 10-15 ஆண்டுகாலம் பல்வேறு ஒப்பந்தக்காரர் களிடம் பணியாற்றிய இத் தொழிலாளர்கள் மீண்டும் சொசைட்டி என்கிற ஒப்பந்தக்காரரி டம் பணியாற்றவேண்டும் என்று சொல் வதில் எந்த நியாயமும் இல்லை. எனவே இவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டும் என வாதாடினார். இதன் நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள், ஒப்பந்தக்காரரிடம் சேர்ந்த தேதியை சீனி யாரிட்டிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சொசைட்டி தேவையில்லை நேரடி யாக நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினர்.இந்நிலையில் ஏஐடியுசி சார்பில் வாதா டிய வழக்குரைஞர் பொது சீனியாரிட்டியில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏன் ஏன்றால் அனைவரும் ஒரே மாதிரியல்ல. 10-வதுக்கு மேல் படித்தவர்கள் தனிசீனி யாரிட்டி ஆக்கி முன்னுரிமை வழங்கவேண்டும் என வாதிட்டார். நீதிபதிகளோ, அப்படி ஒப்பந் தத் தொழிலாளர்களில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? என வினவினர். நமது வழக்கு ரைஞர் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை. அனைவரும் ஒரே சம்பளம்தான் பெறுகிறார் கள். தகுதிக்கேற்ற வேலை நிலமை என்பது கிடையாது. எனவே அனைவரும் சமம். இவர்களை பிரிக்கக் கூடாது. ஒரே சீனி யாரிட்டிதான் சரியானது என வாதிட்டார். நிர்வாக தரப்பு வழக்குரைஞரை நீதிபதிகள் சிங்காரவேலர் சொல்வது சரிதானா? என கேட்டபோது, ஆம் என ஒப்புக்கொண்டார். எனவே நீதிபதிகள் பொதுவான ஒரே சீனி யாரிட்டி அதுவும் ஒப்பந்தத் தொழிலாளியாக சேர்ந்த சீனியாரிட்டிதான் சரியானது, அதன் படி நிரந்தரப்படுத்த வேண்டும் என தீர்ப் பளித்தனர். இவ்வாறு வழக்கை நடத்திய வழக்குரைஞர் விளக்கினார்.நெய்வேலி தொழிலாளர்களுக்கு மட்டு மல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கும் இந்த தீர்ப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.இந்த ஒப்பந்தத்தை உருவாக்க நாம் தொடர்ந்து முயற்சித்துள்ளோம். குறிப்பாக தில்லியில் சிஎல்சி முன் கொடுத்த கடித மும், உச்ச நீதிமன்றத்தில் நாம் கொடுத்த கடிதமும் இவ்வழக்கிற்கு இப்படிப்பட்ட தீர்ப்பளிக்க உதவிகரமாக இருந்தது. நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ.4 சம்பளம் பெற்ற காலம் முதல் இவர்களது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த சங்கம் சிஐடியு சங்கம். அன்றிலிருந்து குறைந்த பட்ச ஊதியத்திற்காக, அரசு விடுமுறை சம்பளத்திற்காக, சீருடைக்காக, சலவை கூலிக்காக, ஒப்பந்தக்காரர்கள் மாறினாலும் தொழிலாளி அதே இடத்தில் பணிபுரிய வைப்பதற்காக எண்ணிலடங்கா போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வெற்றிகண்டுள் ளோம். சிஐடியு பேச்சுவார்த்தையில் இருந்த காலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலன் காக்க, வாய்ப்பு கிடைக்கும் போதெல் லாம் நிரந்தரமாக்க தொடர்ந்து போராடியுள் ளோம்.இன்னும் தொடர்ந்து போராடுவோம். இருப்பினும் இடையில் ஏற்பட்ட தொய் விலிருந்து சரி செய்து முன்னேறுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு - நெய்வேலி தொழிலாளர்களுக்கு ஒரு ஊன்றுகோல். கடந்த காலங்களைப்போல் ஒன்றுபட்ட போராட்டம்தான் இந்த தீர்ப்பை அமல்படுத்த வைக்க முடியும். இதை நெய்வேலி தொழிலா ளர்கள் உணர்ந்துள்ளனர். சிஐடியு அனைத்து சங்கங்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில் தவறான வழிகாட்டுதலால் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தி யில் ஏற்பட்டுள்ள கசப்பான உணர்வையும் சரிசெய்து அனைவரையும் ஒன்றுபடுத்தும் பணியிலும் சிஐடியு ஈடுபட்டுள்ளது. 
Post a Comment