தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ( dinamalar )


தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, ஐந்து யூனிட்கள் உள்ளன. இவற்றில், மே, 14ல், மூன்றாவது யூனிட் பாய்லர் பழுதால், 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இப்பழுது இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு, இரண்டாவது யூனிட் பாய்லரிலும் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, 420 மெகாவாட், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் வள்ளியப்பன் கூறுகையில், ""இரு யூனிட்களிலும் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில், பொறியாளர்கள்

ஈடுபட்டுள்ளனர். இன்று, இரண்டிலுமே, மின் உற்பத்தி துவங்கப்படும்,'' என்றார்.

மேட்டூரில் பாதிப்பு ; மேட்டூர் அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின்

உற்பத்தி திறன் கொண்ட, நான்கு யூனிட்கள் உள்ளன. இவற்றின் மூலம், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரு நாட்களுக்கு முன் வரை, மேட்டூர் அனல் மின் நிலையத்தில், தொடர்ந்து, 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த, 15ம் தேதி, இரண்டாவது யூனிட் பாய்லரில் ஏற்பட்ட பழுதால், 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதித்தது. நேற்று முன்தினம், இரண்டாவது யூனிட் பழுது பார்க்கப்பட்டு, உற்பத்தி துவக்கப்பட்டது. எனினும், அன்று மதியம், மூன்றாவது யூனிட் பாய்லர் பழுதடைந்தது. நேற்று மதியம் வரை, 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று மதியம் திடீரென, முதல் யூனிட் பாய்லரும் பழுதாகியதால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மூன்றாவது மற்றும் முதல் யூனிட்கள் பழுதால், 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின் நிலைய பழுதால், சேலம், மேட்டூர் சுற்றுப் பகுதியில், நேற்று வழக்கத்தை விட, கூடுதல் நேரம் மின்தடை செய்யப்பட்டது.

தொடர்ந்து அள்ளி கொடுக்கும் காற்றாலை மின்சாரம்; கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, காற்றாலைகள் மூலம், தினசரி, 2,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும், நேற்று வழக்கம் போல் மின் தடை செய்யப்பட்டது. வெப்பநிலை உயர்வால், தமிழகத்தில் தினசரி மின்நுகர்வின் அளவு, 25 கோடி யூனிட்களாக உயர்ந்தது. கடந்த, 10 நாட்களில், தினசரி மின் நுகர்வில், 1.5 கோடி யூனிட்கள் உயர்ந்து, தற்போது, தினசரி மின் நுகர்வின் அளவு, 26.5 கோடி யூனிட் அளவிற்கு அதிகரித்து உள்ளது.

தற்போது காற்றாலைகளில் இருந்து, தினசரி, 2,000 முதல் 2,500 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் கிடைக்கிறது. தொடர்ந்து காற்றாலைகள் மூலம், கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, சென்னை உட்பட மாநிலத்தின் பல இடங்களில், மின் தடை நேரம் கணிசமாகக் குறைந்தது. இருப்பினும், நேற்று வழக்கம் போல் மின் தடை செய்யப்பட்டது. காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி அதிகரிப்பால், இரு வார காலமாக, மொத்த மின் உற்பத்தி, 10,500 மெகாவாட்டை தாண்டி உள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click