நீலகிரி மாவட்ட அணைகளில் குறையும் நீர்மட்டம்: மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும்


நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.


 நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீர்மின் திட்டம், பைக்காரா மோயார் நீர்மின் திட்டத் தில் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, மோயார், பைக்காரா உள்ளிட்ட 12 மின் நிலையங்கள் மூலமாக 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர், பார்சன்ஸ்வேலி, போர்த்தி உள்ளிட்ட 14 அணைகளில் கிடைக்கும் நீரைக் கொண்டு மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால், அணைகளின் நீர் வரத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும் வெட்ஸ்டர்ன் கேட்ச்மெண்ட்-1, 2, 3, லோன்வேலி-1, 2, சாண்டிநள்ளா, மேல்கோடுமந்து உள்ளிட்ட நீராதாரங்களில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால், அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது.

 இதே நிலை நீடித்தால் வரும் கோடைகாலத்தில் அணைகளின் நீர் இருப்பு குறைந்து மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைகளின் நீர் இருப்பு விவரம்: (அடைப்புக்குள் அணையின் முழுக் கொள்ளளவு) முக்குருத்தி-51.5 அடி (78), பைக்காரா-57.1 (89), சாண்டிநள்ளா- 21.7 அடி (49), கிளண்மார்கன்- 138 (142), மரவக்கண்டி- 25 (28), மோயார்- 16.1 அடி (17), அப்பர்பவானி- 183.3 (210), பார்சன்ஸ்வேலி- 60 (77), போர்த்தி- 88.8 (130), அவலாஞ்சி- 103.1 அடி (171), எமரால்டு- 117.1 (184), குந்தா-85.5 (89), கெத்தை-149.5 (156), பில்லூர்-226 அடி (242).
 பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் பாதியாக குறைந்துள்ள நிலையில் சில அணைகளில் நீர் இருப்பு தேவையான அளவுக்கு இருப்பதாகத் தெரிந்தாலும் உண்மை யில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைக ளும் கட்டப்பட்டு பல வருடங்களானதால் பெருமளவு சேறும், சகதியும் நிரம்பியுள்ளது. இதனால், மழைக் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது அணையில் நீரைத் தேக்கிவைக்க முடியாமல் திறந்துவிடப்படுகிறது. 

 இதனால், கோடைக்காலங்களில் போதிய நீர் இருப்பு இல்லாமல் மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வழக்கமாகி விட்டது.  மாவட்டத்தில் உள்ள அணைகளைத் தூர்வார நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முழுக் கொள்ளவுக்கு நீரைத் தேக்கி சிக்கல் இல்லாமல் மின் உற்பத்தி செய்ய முடியும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click