நாட்டின் மின் உற்பத்தி 76,277 கோடி யூனிட்டுகள்






புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், உள்நாட்டில், 76,277 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 77, 187 கோடி யூனிட் மின்சாரத்தை விட சற்று குறைவாகும் என, மத்திய மின் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.நீர்மின் உற்பத்தி:நடப்பு நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், 93 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங் களில், போதிய அளவிற்கு மழை இல்லாததால், நீர்மின் உற்பத்தி குறைந்து போயுள்ளது.உள்நாட்டில் மரபு சார்ந்த அடிப்படையில், அனல், புனல் மற்றும் அணுமின் திட்டங்கள் வாயிலாக, அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, பூட்டானிலிருந்து, மின்சாரம் தருவித்து கொள்ளப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், அணு மின் திட்டங்கள் வாயிலாக, 3,520 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரை, இத்திட்டங்கள் வாயிலாக, 2,745 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கூடங்குளம் அணு மின் திட்டம் இன்னும், செயல்பாட்டிற்கு வராததால், இவ்வகையிலான மின் உற்பத்தி இலக்கு எட்ட வாய்ப்பில்லை என, அமைச்சர் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் நீர்மின் திட்டங்கள் மூலம், 12,204 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி மூலம், 10 மாத காலத்தில், இப்பிரிவின் வாயிலாக, 9,907 கோடி யூனிட் 

மின்சாரம்:உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.அனல் மின் திட்டம்:இதே போன்று, நடப்பு நிதியாண்டில், அனல் மின் திட்டங்கள் வாயிலாக, 76,728 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில், ஜனவரி வரையிலான காலத்தில், இப்பிரிவின் வாயிலாக, 63,144 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், பூட்டானிலிருந்து, 548 கோடி யூனிட் மின்சாரம் தருவிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஜனவரி வரையிலுமான காலத்தில், இந்நாட்டிலிருந்து, 471 கோடி யூனிட் மின்சாரம் தருவிக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் சிந்தியா மேலும் கூறினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click