1000 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்: 92 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்ப


சூரிய ஒளி சக்தி மூலம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தில் பங்குபெற்று மின் உற்பத்தி செய்வதற்கு 92 நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன.இதிலும் ஒரு நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மிதமுள்ள நிறுவனங்கள் மொத்தம் 499 மெகா வாட் அளவு மின் உற்பத்திக்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன.

சூரிய ஒளி சக்தி மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,000 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.இதில் 1000 மெகா வாட் தனியார் மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவது மற்றும் இறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாத காலமாக இந்த ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு வந்தன. மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.4) ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
92 நிறுவனங்கள் மொத்தம் 499 மெகா வாட் அளவு மின் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன. ஒரு நிறுவனத்தின் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இது தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளி. ஒரு சில நாள்களில்  விலைக்கான ஒப்பந்தப் புள்ளிகளும் திறக்கப்படும்.தேர்வு செய்யப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் வாரியத்தின் ஒப்புதல் மற்றும் நிதிக் குழு என்பன உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர், குறைவான ஒப்பந்தப் புள்ளிக்கு, பிற ஒப்பந்ததாரர்கள் தங்களுடை தொகையை குறைத்து நிர்ணயிப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்படும். ஜனவரி இறுதிக்குள் தேர்வு செய்யப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு விடும். அடுத்த இரண்டு மாத காலத்தில் ஒப்பந்தத்துக்கான உத்தரவு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு விடும்.மீதமுள்ள 501 மெகா வாட் மின் உற்பத்திக்கு, தொடர்ந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என்றார்

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click