மின் பற்றாக்குறையைத் தீர்ப்பது எப்படி? : தமிழக முதல்வர் தலைமையில் மீண்டும் ஆய்வு


நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் அமைக்கப் பட்ட 10 பேர் கொண்ட குழுவினரும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைத்த இந்த குழு தமிழகத்தில் நிலவும் கடுமையான  மின்வெட்டு குறித்தும், தமிழகத்துக்கு எவ்வளவு மின் பற்றாக்குறை உள்ளது என்பது குறித்து, இதை எப்படி தீர்த்து வைப்பது என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து அறிக்கையை வாரம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.
 
அதன்படி, இன்று 2 வது முறையாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைப் பெற்றதாகத் தெரிகிறது. கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றி நீண்ட நேரம் விவாதிக்கப் பட்டதாகவும் தெரிய வருகிறது. கடந்த வாரம் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப் பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது, டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க வழித்தடம் சரியாக இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் எடுத்து வைத்தது குறிப்பிடத் தக்கது.

     தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் வெட்டுப் பிரச்சனையால், தமிழக மக்கள் பசி பட்டினி என்று வாடுவததோடு, நோய்களும் அவர்களை துரத்த ஆரம்பித்து இருப்பது மிகக் கொடுமையான விஷயம் என்று பல  தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. தொழில் நகரமான சென்னை அம்பத்தூர் எஸ்டேட்  கடுமையான மின்வெட்டால் பாதிக்கப் பட்டு, எஸ்டேட் வெறிச்சோடிக் கிடப்பது வேதனையான விஷயம் என்றும் அம்பத்தூர் தொழில் நகர மக்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.

1 comment:

krishnamoorthymoorthy said...

past...15..years....no...elecy..new...projects...have...been..established....both...DMK...and...AIADMK....govt...s...in..tamilnadu,,,NO...BUDJET,,,allocation..for...new...projects,,,in,..the...same..period...KANN..???...KETTA...PIN....SURIYA..NAMASKARAM...ENDRA...EVARKAL...NILAI....ENTHA...magazine...ummm..????elutha...villai...????EANN...?????////krishnamoorthy..gobi

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click