அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடன் ரூ.25 லட்சமாக உயர்வு


அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அதில் அறிவிக்கப்பட திடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதும், புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவைப்படும் கூடுதல் நிதியை வழங்குவதே முதல் துணை நிதி நிலை கோரிக்கையின் நோக்கமாகும். அதன் அடிப்படையில் ரூ.5,617.14 கோடி கூடுதலாகத் தேவைப்படுகிறது என கோரப்பட்டது.  

அரசு ஊழியர்களுக்கு  வீடுகட்ட முன்பணக் கடன் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சத்தை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசு கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ள அளவு ரூ.20,716 கோடி என்றாலும், வரவு செலவு திட்டமதிப்பின்படி ரூ.18,387.47 கோடி கடன் பெற நாம் உத்தேசித்துள்ளோம். மின்சார பகிர்மான கழகத்திற்கு வழங்கப்படும் கூடுதல் நிதி உதவியையும் கணக்கில் கொண்டாலும் கூடுதலாக கடன் பெறாமல் அரசின் நிதித் தேவையை நிறைவு செய்யவே தமிழக அரசு முயன்று வருகிறது.

மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கூடுதல் நிதியை கோரியுள்ளோம். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்ற ரூ.4,086 கோடியில், ரூ.1,000 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. நீலம் புயலுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்கள். மாநில பேரிடம் நிவாரண நிதி 2012,2013 நிதி ஆண்டிற்கு ரூ.323 கோடியே 61 லட்சம்  ஏற்கெனவே அரசு ஒதுக்கி உள்ளது. இதிலிருந்து உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click