மின் வாரிய பிரிப்பும்-அதனால் உள்ள பயனும்?



                             
  மின்வாரியத்தை தமிழக அரசு மத்திய அரசின் ஆலோசனையிலும்-கட்டாயத்திலும் தனியார் மயமாக்கலுக்கு ஆதரவாக மூன்று தனி நிறுவனங்களாக பிரித்துள்ளது.இதனால்  மக்கள்-அரசு-தனியார் யாருக்கு லாபம்.இதை இக்கட்டுரையாளர் விரிவாக நோக்குகிறார்.இக்கட்டுரையாளர் "தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய மைப்பின் தலைவர்."
சுரன்
தமிழகத்தில் கட்டுமானத்தில் உள்ள மின்நிலையங்கள் என்றைக்கு மின்உற்பத் திக்கு வரும் என்றும், எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மின்நிலையங்கள் எப்பொழுது வரும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின் றார்கள். ஆட்சியாளர்களும் இதோ வந்து விடும், வந்து விட்டால் மின்தட்டுப்பாடு ஓரளவு தீரும் என்று ஆரூடம் சொல்லிக் கொண்டு வருகின்றார்கள்.

வடசென்னையில் இரண்டு 600 மெகா வாட் திறன் உள்ள அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு, செப்டம்பர் 2011-ல் ஒரு மின்நிலையம் உற்பத்தியை துவங்கும். அடுத்த மின்நிலையம் டிசம்பர் 2012 -ல் துவங்கும் என்றும் கூறப்பட்டது,



இந்த மின்நிலையங்களை கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டிய பணியை பிஎச்இஎல் நிறுவனம் தான் செய்கின்றது. பல மாநிலங் களில் இந்நிறுவனம் இலக்கு நிர்ணயிக்கப் பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துள்ள தாக செய்திகளை பார்க்கின்றோம்.
சுரன்

சமீபத்தில் கூட நெய்வேலியில் 250 மெகாவாட் திறன் கொண்ட மின்சார நிலையம், குறித்த காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு உற்பத்தி துவங்கிவிட்டது.

600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல் மின்நிலையத்தை பிஜிஆர் எலக்ட்ரிக் கம்பெனி கட்டி முடித்து ஒப்ப டைக்க வேண்டிய காலம் செப்டம்பர் 2011-ம் ஆண்டு ஆகும்.


அதிமுக கட்சி ஆட்சி பொறுப்பேற்ற வுடன் ஜூன் மாதம் 2012-ல் 1800 மெகாவாட் உற்பத்தி கூடுதலாக கிடைக்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. ஜூலை மாதம் முடியப் போகின்றது. இதுவரையில் மின் உற்பத்தி கூடுவதற்கான எந்தவித தடயமும் இல்லை.

சுரன்

வல்லுனூர் அனல்மின்நிலையத்தில் முதல் 500 மெகாவாட் மின் நிலையம் மின் உற்பத்திக்கு தயாராகவே உள்ளதாக சொல் லப்படுகிறது. ஆனால் மின்உற்பத்திக்கான தடயம் இல்லை.

மக்களின் அவதியை தீர்ப்பதற்கான எந்த ஏற்பாடும் உடனடியாக கண்ணுக்குத் தெரிய வில்லை. உடனடித் தீர்வாக தமிழக மின் வாரியம் வெளி மாநிலங்களிலிருந்து மின் சாரத்தை வாங்குவதற்கு தயார் செய்து கொண் டிருக்கிறது. மக்களின் நலனுக்காக மின்சாரம் வெளியிலிருந்து விலை கொடுத்து வாங்கு வது நல்லது என்றாலும், மின்உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற அனைத்து மின்உற்பத்தி யையும் முழுமையாக பயன்படுத்திய பின் னரே பற்றாக்குறை ஏற்படும் மின்சாரத்தை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை, அதனால் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது என்று கூறுவது நியாயமான ஒன்றாகும்.

நீர்மின்நிலையங்கள் (அணைகளில் தண் ணீர் சேமிப்பு இல்லை)தவிர மின்உற்பத்திக் குத் தகுதி இருந்தும் மின்உற்பத்தி செய்யாமல் இருக்கும் மின்நிலையங்களின் மின் உற்பத்தி திறன் மதிப்பு 1700 மெகாவாட் ஆகும்.

மின் உற்பத்திக்கு கொண்டு வருவதற்கு தடையாய் இருப்பது எது? மின்வாரியத் திற்கும் அரசுக்குமே தெரியும், இது ஒரு பக்கம், இரண்டு அனல் மின்நிலையங்கள் வட சென்னை, மேட்டூர் மின்நிலையங்கள் குறித்த காலத்தில் மின் உற்பத்தியை துவக்கியிருக்க வேண்டும்.

அவ்வாறு குறித்த காலத்தில் துவக்க வில்லை என்றால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 105 கோடி ரூபாயை கட்டுமானத்தை செய்யக் கூடிய நிறுவனங்கள் தண்டத்தொகையாக மின்வாரியத்திற்கு அளித்திடவேண்டும்.
சுரன்


வடசென்னை அனல்மின்நிலையத்தை பிஎச்இஎல் நிறுவனம் கட்டி ஒப்படைக்க வேண்டும். இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் ஒழிய இந்த ஒப்பந்தத்தின் விதிகளிலிருந்து விதி விலக்கு பெற முடியாது. இதற்கு தேவை யான ஜெனரேட்டர் ஹரித்துவாரிலிருந்து சாலை வழியாக கொண்டு வந்தபொழுது சாலையில் ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஜெனரேட்டரின் பளுவை தாங்க முடியாத காரணத்தினால் ஆற்றில் விழுந்து விட்டதாக தாமதத்திற்கு காரணத்தை கூறலாம்.

ஜெனரேட்டர் கொண்டுவந்து பொருத்த வேண்டிய பொறுப்பு பிஎச்இஎல் பொறுப்பு ஆகும். மிக பளுவான இயந்திரத்தை கொண்டுவரும் பொழுது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்றியிருந்தால் இந்த தவறு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.

எப்படியிருந்தாலும் தாமதத்திற்கு மின் வாரியம் காரணமில்லை. பிஎச்இஎல் ஒரு பொதுத்துறை நிறுவனம், அதற்கு தண்டம் விதிப்பது சரியாக இருக்காது என்று கூறு வதும் நியாயமல்ல.
சுரன்
காயம்குளம் மின்நிலையம் மத்திய அரசிற்கு சொந்தமான மின்நிலையம், அங்கி ருந்து தமிழக அரசு விலை கொடுத்து மின் சாரம் வாங்குகின்றது. ஒரு யூனிட் விலை ரூ. 9.30 ஆகும். அதே போன்று ரயில் மூலம் நிலக் கரியை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு டன் நிலக்கரிக் கான சரக்கு கட்டணம் 1400 ரூபாய் ஆகும். இதனால் தமிழக மின்வாரியம் செலவு கள் கூடத்தான் செய்கிறது. மத்திய அரசு ஒன் றும் இதைப்பற்றி கவலைப்பட்டதாக இல்லை.

ஒன்பது மாதம் தாமதம் ஏற்பட்டால் ஒப்பந்தப்படி 900 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கவேண்டும்.

அதே போன்றுதான் பிஜிஆர் எலக்ட்ரிக் கம்பெனி, மேட்டூர்அனல்மின்நிலையம் 600 மின்உற்பத்தி நிலையமும் செப்டம்பர் மாதம் 2011 இல் உற்பத்திக்கு வந்திருக்கவேண்டும். இதுநாள் வரையில் மின்உற்பத்திக்கு வரவில் லை. அக்கம்பெனியும் தமிழக மின்வாரியத் திற்கு மாதம் தோறும் 100 கோடி ரூபாய் என்ற ளவில் 900 கோடி ரூபாய் தண்டத்தொகை அளித்திருக்க வேண்டும்.

சுரன்

தண்டத்தொகையை ஒப்பந்தப்படி செலுத்த நிர்ப்பந்தித்தால் கட்டுமான வேலை கள் நின்று போய்விடும் என்று வாரியம் அஞ்சுகிறதாம். அரசும் அதை அங்கீகரிக் கிறது, மின்வாரியம் தண்டத்தொகை பற்றி பரி சீலித்து இருந்தால் மக்கள் மீது மலைபோல் குவிக்கப்பட்ட மின்கட்டணத்தை சற்று குறைப்பதற்கு இது உதவியிருக்கும்.

மின்வாரியங்கள் பிரிக்கப்படவேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்த பொழுது அதற்கான காரணமாக சொல்லப்பட்டது மின்நிலையங்கள் உற்பத்தியை அதிகமாக்க. மின்சாரத்தை தரமானதாகவும் தடையின்றி யும் 24 மணி நேரமும் மின்கம்பி இழப்பைக் குறைத்து அனைவருக்கும் மின்சாரம் குறைந்த விலையில் வழங்கிட மாநில மின்சார வாரியங் களால் முடியாது, தனியாரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அரசின் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டது. மேலே மத்திய அரசினால் சொல்லப்பட்ட ஒன்றே ஒன்று மட்டும் நடந்துள்ளது. முதலாளிகள் மின்துறைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சுரன்

முதலாளிகள் மின்துறைகளில் அனுமதிக்கப்பட்ட தில்லி மாநிலத்தின் 2002 ஆண்டு முதல் 2012 வரை 10 ஆண்டுகள் அனுபவத்தை ஷ்நுநு என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததன் விவரங் களை பார்க்கும்பொழுது அரசு நினைத்தது நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. முதலாளிகளின் நலன் பாதுகாக்கப்பட்டுள் ளது, மக்களுக்கு துன்பமே தொடர்கிறது. மின் விநியோகம் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.

டாடா மற்றும் ரிலையன்ஸ் கம்பெனிகள் தான் மின்விநியோகம் செய்கின்றன. மின்கட் டணம் ஒரு யூனிட் மின்சாரம் 125 பைசாவி லிருந்து 350 பைசா உயர்ந்துள்ளது. மின்சாரத் தின் தேவை 2879 மெகாவாட்டிலிருந்து 5500 மெகாவாட் வரை உயர்ந்த நிலையில் மின் உற்பத்தி இந்த 10 ஆண்டுகளில் வெறும் 52 மெகாவாட் மட்டும் கூடியுள்ளது, மின்வெட்டு 3 மணி நேரம் என்பது சற்று குறைக்கப்பட் டுள்ளது, மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதவீத மின் திருட்டு குறைப்பால் தனியார் முதலாளி களுக்கு 90 கோடி ரூபாய் வருமானம் கிடைத் துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு அளிக்க வேண்டிய பாக்கித்தொகைகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட கோடி ரூபாய் உள்ளது. ஆக தனியாருக்கு தில்லி மின்வாரியத்தை ஒப்படைத்ததன் காரணத்தினால் மின்நுகர்வோர்களுக்கு துன்பமே தொடர்கிறது.
சுரன்


மின்விநியோகத்தில் ஈடுபடும் டாடா, ரிலையன்ஸ் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது. ஒடிசா மாநிலத்திற்கு அடுத்த மாநில அனுபவம் இதுதான்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் மின் கட்டணத்தை உயர்த்தும் பொழுது மக்களை சமாதானப்படுத்த சொன்ன வார்த்தைகள், மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாக நீடிக்க வேண்டுமென்றால் மக்கள் மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகள் ஏமாற்றும் வார்த்தைகளாகப் போகின்றது.

தமிழக முதலமைச்சரின் வார்த்தைகள் உண்மையாக வேண்டுமென்றால் தமிழக மின்வாரியத்தை காப்பாற்றுவதற்கு மத்திய அரசின் மின்கொள்கையை மாற்றுவதற்கு போராடுவது மட்டுமல்ல, தமிழக மின்வாரி யத்தை கடனிலிருந்து மீட்பதற்கான 50 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றால் மட்டுமே சாத்தியமாகும், இல்லையென்றால் முதலாளி களின் கொள்ளை லாபவேட்டைக்காடாக தமிழகம் மாற்றப்படும். மின்நுகர்வோர்கள் மின் தேவையின் பேரால் வேட்டையாடப்படுவது நிச்சயம்.

கட்டுரையாளர் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click