செஞ்சி : மின் நிலையம் வெடித்து சிதறியது


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் செல்லும் சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் 16 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின் நிலையம் உள்ளது.

இந்த மின் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள சத்தியமங்கலம், தாண்டவசமுத்திரம், கே.பாப்பாம்படி துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் அனுப்பப்படுகிறது. இவைகள் மூலம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சார வசதி பெறுகிறது. பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

இந்த மின் நிலையத்தில் இன்று காலை 6 மணி அளவில் இந்த மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பவர் டிரான்ஸ் மீட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதுடன் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அதே நேரத்தில் செஞ்சி நகர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்களும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் மின்நிலையம் அருகில் உள்ள வீடுகளில் மின் மீட்டர் வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.


தகவல் அறிந்து செஞ்சி தீயணைப்பு வீரர்கள், மின் துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மணலை கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக செஞ்சி மேல்மலையனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது.


செஞ்சி டிஎஸ்பி பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் மின் நிலையத்தில் இருந்த பவர் டிரான்ஸ் மீட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. 

சேத மதிப்பு 3கோடிக்கு மேல் இருக்கும் என மின் அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தில் சேதம் அடைந்த பவர் டிரான்ஸ் மீட்டரை சரி செய்ய நீண்ட நாள் ஆகலாம் என தெரிகிறது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click