மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் மின்கட்டண உயர்த்துவதற்கு அனுமதி கேட்டுதமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மக்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.

மின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 - 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்களுக்கு வரை கட்டணம் இல்லை. 500 யூனிட்களுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 4 எனவும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கு, 120 யூனிட்கள் வரை, யூனிட்டிற்கு ரூ.2.50 எனவும், 120 யூனிட்களுக்கு மேல், யூனிட்டிற்கு ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்கள் வரை , யூனிட்டிற்கு 4.30 எனவும், 101 யூனிட்களுக்கு மேல் ரூ. 7 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோருக்கு யூனிட்டிற்கு ரூ. 10. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, யூனிட் ரூ.3.50 எனவும், 100 யூனிட்களுக்கு மேல், ரூ. 4 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணம் யூனிட்டிற்கு ரூ.5.50 எனவும்,செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம், யூனிட்டிற்கு ரூ. 4.50 எனவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 5 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்கட்டண உயர்வால் மின்சார வாரியம் நஷ்டமின்றி இயங்கும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click